கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அமராவதி பழைய பாலத்தில் நடைபாதை பூங்கா திறப்பு

By செய்திப்பிரிவு

கரூர் அமராவதி ஆறு பழைய பாலத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் ‘வாக் என் ஜாக்’ நடைபாதை பூங்காவை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கரூர் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்பு நலநிதி மூலம், கரூர்-திருமாநிலையூரை இணைக்கும் அமராவதி ஆற்றின் பழைய பாலத்தில் ரூ.2 கோடியில் ‘வாக் என் ஜாக்’ என்ற நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதை பூங்காவை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.மலர்விழி, கேவிபி மேலாண் இயக்குநர் பி.ரமேஷ்பாபு உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

இந்த பூங்காவில் நடைபாதை யின் நடுவிலும், பக்கவாட்டிலும் பூந்தொட்டிகளும், நடைபாதை யில் பேவர் பிளாக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், நடைபயிற்சி செல்பவர் கள் இசையை கேட்டு ரசிக்கும் வகையில் ஸ்பீக்கர்கள் பொருத் தப்பட்டு இசை ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நடைபயிற்சி செய்பவர்கள் இளைப்பாற நடைபாதையின் இடையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலத்தின் நுழைவு பகுதியில் நீரூற்றுடன் கூடிய சிறிய பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை கள் விளையாடும் வகையில் விளையாட்டுத் திடலும் அமைக்கப் பட்டுள்ளது. மியாவாக்கி முறையில் அடர்த்தியான காடும் உருவாக்கப்பட்டுள்ளது.l

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்