பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆற்றல் மாற்று தின விழா இணைய வழியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஆற்றல் வளங்கள், ஆற்றல் பயன்பாடு, ஆற்றல் சேமிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.
இதில், 9-ம் வகுப்பு மாணவர் களின் செயல்திட்டமான காற்று ஆற்றல் மரம் முதலிடம் பிடித்தது. 6 முதல் 10 வரையிலான வகுப்பு மாணவர்கள் மாற்று எரிசக்தி ஆதாரங்கள், புதுப்பிக்கத் தக்க ஆற்றல்கள், இயற்கை வளங்கள் மூலம் ஆற்றல் தயாரிப்பதற்கான வழிகளை கண்டறிந்து செயல்திட்டங்களை சமர்ப்பித்தனர். சிறப்பான செயல் திட்டங்களை உருவா க்கிய மாணவர்களுக்கு பரிசளிக்கப் பட்டது. ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந் திரன் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago