திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, சுய தொழில் ஊக்குவிப்பு தொடர்பான திறன் குழு கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்து, வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளித்து, இளைஞர்களை திறமையான தொழில் பழகுநராக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சி அளித்து, அதன் மூலம் அவர்களுடைய குடும்ப வருமானத்தை பெருக்க வழிவகை செய்யலாம். நலிவடைந்து கொண்டிருக்கும் பாரம்பரிய தொழில்களை மேம்படுத்த அதற்கான திறன் பயிற்சி அளிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்களை சந்தைப்படுத்தவும், தொழில் முதலீட்டாளர்களுக்கு வங்கியின் மூலம் தேவையான கடனுதவி வழங்கவும் வேண்டும். இத் திட்டத்தை செயல்படுத்துவதில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago