தி.மலை மாவட்ட விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு பிரதம ரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது என தி.மலை மாவட்டவேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்தத் திட்டத் தில் மாவட்டம் வாரியாகவும் பயிர் வாரியாகவும் சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டை பதிவு செய்திட மத்திய அரசின் இந்த வேளாண் காப்பீட்டு கழகம் தி.மலை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ராபி பருவத்தில் விவசாயிகள் காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தங்கள் விருப்பத்தின் பேரில், அறி விக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லது வேளாண் அலுவலர் அல்லது உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
தி.மலை மாவட்டத்தில் காப் பீட்டுத் தொகையாக ஓர் ஏக்கருக்கு நவரை பருவ நெல்லுக்கு ரூ.436.50, மக்கச்சோளம் ரூ.267, நிலக்கடலை ரூ.378, உளுந்து ரூ.217.98, கம்பு ரூ.156, எள் ரூ.141.75, கரும்பு ரூ.2,600, மர வள்ளி ரூ.970, சிவப்பு மிளகாய் ரூ.1,065, வாழை ரூ.2680 என காப்பீடு செய்யப்பட உள்ளன.
காப்பீடு செய்ய நெல்லுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ம் தேதியும், மக்காச்சோளத்துக்கு இம்மாதம் 31-ஆம் தேதியும், உளுந்து பயிருக்கு வரும் ஜனவரி 18-ம் தேதியும், நிலக்கடலைக்கு வரும் பிப்ரவரி 2-ம் தேதியும், கரும்புக்கு அடுத்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதியும், கம்புக்கு வரும் மார்ச் 16-ம் தேதியும், எள் பயிருக்கு வரும் மார்ச் 31-ம் தேதியும் வாழைக்கு வரும் மார்ச் 16-ம் தேதியும், சிவப்பு மிளகாய் பயிருக்கு வரும் பிப்ரவரி 15-ம் தேதியும், மரவள்ளி பயிருக்கு வரும் பிப்ரவரி 16-ம் தேதி கடைசி நாளாகும். குறிப் பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago