மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 8 மாதங்களாக கரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
9 வது மாதமாக நேற்று முன்தினம் இரவும் அதே நிலை தொடர்ந்தது. பக்தர்கள் இன்றி கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
நேற்று முன் தினம் காலை மூலவர் அங்காளம்மனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது தொடர்ந்து உற்வர் அங்காள அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாரதனையுடன் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு செய்திருந்தார். முன்னதாக விழுப்புரம் டிஐஜி எழிலரசன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago