விழுப்புரம் மாவட்டத்தில் 4,630 ஹெக்டேரில் நுண்ணீர் பாசனத் திட்டம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்துறை சார்பாக பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் செயலாக்க குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பேசிய தாவது:

இத்திட்டத்தின் கீழ் 2020-2021 ம் ஆண்டிற்கு 8800 ஹெக்டருக்கு ரூ.58.16 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4,630 ஹெக்டர் நிலங்களில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து அனைத்து கிராமங்களிலும், விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர் செல்வபாண்டியன், தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்