குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணம் ரத்து சலுகை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் ரத்து, பதிவுக் கட்டணம் குறைப்பு சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முத்திரைத்தாள் கட்டணம் ரத்து மற்றும் பதிவுக் கட்டண சலுகையை மார்ச் 2021 வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான பிணை ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் அல்லது கூடுதல் கடன்களுக்கான தலைப்பு ஆவணங்கள் வைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக (அதிகபட்சம் ரூ.10 ஆயிரம்) குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்