திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடத்தப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் காலை 11 மணி முதல் பகல் 1 மணிவரை காணொலி காட்சி வாயிலாக விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயனடையலாம். அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்களில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிலிருந்து குறைகளைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (17-ம் தேதி) காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. கூட்டத்தில், ஆட்சியர் சமீரன் தலைமையில் வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.தென்காசி மற்றும் செங் கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகள் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டார விவசாயிகள் கீழப்பா வூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சங்கரன் கோவில், மேலநீலிதநல்லூர் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், குருவிகுளம் வட்டார விவசாயிகள் குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று, தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago