ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விழா நாட்களில் ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 600 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.
ரங்கம் ரங்கநாதர் கோயி லில் வைகுண்ட ஏகாதசி விழாவை யொட்டி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் நேற்று திறந்து வைத்தார். அப் போது அவர் அளித்த பேட்டி:
வைகுண்ட ஏகாதசி திருவிழா வையொட்டி ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் 117 சிசிடிவி கேமராக்கள், நான்கு உத்திர வீதிகளில் கண்காணிப்பு கோபு ரங்கள் மற்றும் 25 சிசிடிவி கேமராக் கள் நிறுவப்பட்டுள்ளன. இதே போல ரங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்ள 29 இடங்களில் ஒலிப்பெ ருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பகல்பத்து மற்றும் ராப்பத்து திருவிழா நடைபெறும் நாட்களில் துணை ஆணையர்கள் உட்பட 450 பேர் காவல் பணிக்கு நியமிக் கப்பட்டுள்ளனர்.
சொர்க்கவாசல் திறப்பு விழா வின்போது 2 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்வர். விழா நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 600 பேர் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். டிச.24-ம் தேதி மாலை 4 மணி முதல் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் டிச.25-ம் தேதி காலை 8 மணி வரை பொதுமக்கள், விஐபிக்கள், உபயதாரர்களுக்கும் அனுமதியில்லை. யாருக்கும் பாஸ் வழங்கப்படாது. அன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனு மதிக்கப்படுவர். 25-ம் தேதி காலை 8 மணி முதல் 10 வயதுக்கு கீழ் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கோயில் இணை ஆணையர் ஜெயராமன், காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம், காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago