திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிமுத்தாறு முதல் ரீச் பகுதி விவசாயிகள் அளித்த மனு விவரம்:
இவ்வாண்டு மழையின்றி முதல் ரீச் பகுதியில் குளங்கள் நிரம்பவில்லை. 2-வது ரீச் பகுதியில் பச்சையாறு தண்ணீர் வந்து, அந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. 3 மற்றும் 4-வது ரீச் பகுதிக்கு தற்போது தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. 1-வது ரீச் பகுதிக்கு மணிமுத்தாறு அணை தண்ணீரைத் தவிர, வேறு நீர் ஆதாரம் கிடையாது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் உள்ளதால் 4 பகுதிகளுக்கும் தண்ணீர் போதுமானதாக உள்ளது. எனவே, சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடி தண்ணீருக்காக 80 அடி வாய்க்கால் முதல் ரீச் பகுதிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு
அனைத்து ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி மாணவ, மாணவிகள் அளித்த மனுவில், “தொடக்க கல்வி ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு கடந்த 21.9.2020 முதல் 7.10.2020 வரை நடைபெற்றது. இத் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 98 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். கரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டம், போக்குவரத்து வசதி முழுமையாக இல்லாத நேரம், விடுதிகள் திறக்க கூடாது என்ற அரசின் உத்தரவு, பல மாவட்டங்களில் ஒரே ஒரு தேர்வு மையம், தொடர்ச்சியாக 14 நாட்கள் தேர்வு என்று பல்வேறு தேர்வு திட்டமிடுதல் குறைபாடு தான் இதற்கு முக்கிய காரணம். எனவே, அரசு ஒரு விசாரணை குழுவை அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும். விடைத்தாள்களை ஆய்வு செய்து ஆன்லைன் தேர்வோ அல்லது மறுதேர்வோ நடத்தி தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டுவடம் பாதித்தோர் மனு
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “ கடந்த ஆண்டிலிருந்து தண்டுவடம் பாதிப்படைந்தவர்களுக்கு சிறப்பு ஸ்கூட்டர்வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு ஸ்கூட்டர்களை தொடர்ந்து வழங்கவேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.1500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டு” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி ஆர். இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மனுவில்,“ சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எஸ்.மாரிமுத்து, ஊனமுற்றோர் உதவித் தொகை மற்றும் செயற்கை கால் உபகரணங்கள் கேட்டு மனு அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago