வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் பார்வை யாளரும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணை யம் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் தலைமை வகித்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-21-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் செய்யும் பணி நடைபெறகிறது. இதையொட்டி, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வேலை நாட் களில் விண்ணப்பங்கள் பெறப்படும். https://www.nvsp.in/ மற்றும் elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதி உள்ள வாக்காளர்கள் அனைவரும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago