விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, வானூர் வட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் எறையூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை நேற்று மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்டஆட்சியருமான அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த் தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது பூர்த்தியடைந் தவர்களை கண்டறிந்து உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும்.வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருமுறை இருந்தால் உடனடியாக நீக்கிட வேண்டும். சமீபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் இருக்குமாயின் அவர்களுடைய பெயரினை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் இல்லையெனில் படிவம் 7- ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிட வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வானூர் வருவாய் வட்டாட்சியர் சங்கரலிங்கம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago