பணி நிரவலால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்துகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாபல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நூலக துறையிலிருந்து 25 பேர் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்த காலம் கடந்த 11-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு பணி புதுப்பிப்பு ஆணையோ அல்லது பல்கலைக்கழகத்திற்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்கான ஆணையோ வழங்கவில்லை. அவர்களுக்கு பணி உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட பயன்கள்இந்த 3 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அவர்கள் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனை சந்தித்து இதுகுறித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நிரவலுக்கு சென்ற எங்க ளுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை, பணி முன்னறிவுத் திட்டம் மற்றும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்து ரைகளை இன்னும் அமல்படுத்தவில்லை. கடந்த 2019-ம்ஆண்டு வாங்கிய சம்பளத்தையே இன்றும் வாங்கி வருகிறோம். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலோடு பணியாற்றுகிறோம். அண்ணா பல்கலைக் கழகத்தில் பணி நிரவலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக வழங்க வேண் டும் மேலும் 3 ஆண்டு பணி காலம் முடிந்தவர்களின் பணி தொடர்பாக சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்