மதுரை உட்பட 4 ஊர்களில் சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கு நேற்று நடைபெற்ற எழுத் துத் தேர்வில் விருதுநகர் மாவட் டத்தில் 20,817 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலைக் காவலர், சிறைக் காவலர் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத் தேர்வு, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 14 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 23,009 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 20,817 பேர் பங்கேற்று நேற்று தேர்வு எழுதினர். 2,192 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின் தேர்வறைக்குள் அனுமதிக் கப்பட்டனர். தேர்வு மையங்களில் மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 16,514 ஆண்களும், 2621 பெண்களும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் மொத்தம் 14925 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1589 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை திண்டுக்கல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி, மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா ஆகியோர் பார்வையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த போலீஸ் எழுத்துத் தேர்வில் 13938 ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இத்தேர்வு ராமநாதபுரம், பரமக்குடி, கீழக் கரை ஆகிய ஊர்களில் 13 மையங் களில் நடைபெற்றது. மாவட்டத்தில் 15,509 (ஆண் மற்றும் பெண்) பேருக்கு தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 11884 ஆண்கள், 2054 பெண்கள் என 13,938 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வுக்கு 1317 ஆண்கள், 254 பெண்கள் வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ. கார்த்திக் பார்வையிட்டார்.

மதுரையில்...

மதுரை மாவட்டத்தில் 37,405 பேர் விண்ணப்பித்திருந்தனர். 42 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இதில் 34,140 பேர் தேர்வெழுதினர். 3,266 பேர் தேர்வெழுதவில்லை. டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த தேர்வை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்