நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.1.12 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கம்பன் நகரில் அங்கன்வாடி மையத்துக்கு ரூ.12.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம், சுந்தரம் காலனியில் ரூ. 24.90 லட்சம் மதிப்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொது மக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டன. இம்மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரி களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணை இயக்குநர் நாகராஜன், குமாரபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago