பொன்னமராவதி அருகே ஒருவார மழைக்கே தாக்குப்பிடிக்காமல் சேதம் அடைந்த புதிய தார்ச் சாலை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒரு வார மழைக்கே தாக்குப்பிடிக் காமல் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதம் அடைந் துள்ளது.

பொன்னமராவதி அருகே ஆல வயலில் இருந்து கண்டியாநத்தம் வரை 1.5 கிலோ மீட்டருக்கு சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை தரமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் மத்திய அரசின் திட்டத்தில் இருந்து ரூ.84 லட்சத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழைக்கே சாலையில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

மேலும், கண்டியாநத்தத்தில் உள்ள இடையன் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட ஓடு பாலத்தில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. எனவே, சாலையை தரமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்