2-ம் நிலை காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 21 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தார். இத் தேர்வுக்கு 20,680 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 18,512 பேர் தேர்வை எழுதினர். 2,168 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு மொத்தம் 15,547 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 14,242 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 1,305 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வு மையங்களில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வை 14,465 பேர் எழுதினர். மாவட்டத்தில் இத்தேர்வை எழுத மொத்தம் 16,134 பேர் விண்ணப்பித்திருந்தனர். 1,669 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 15,800 ஆண்கள், 2,137 பெண்கள் என, மொத்தம் 17,937 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,980 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மொத்தம் 15,957 பேர் தேர்வு எழுதினர்.

கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

அவசர தேவைக்காக சில தேர்வு மையங்களின் அருகில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்