புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன் தகவல்

By செய்திப்பிரிவு

பாஜக மாநில துணைத் தலைவர்கே.எஸ்.நரேந்திரன் நேற்று வேலூருக்கு வந்தார். அப்போது,அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "வாஜ்பாய் ஆட்சிக் காலத் தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு காங்கிரஸ்ஆட்சிக்காலத்தில் விவசாயி களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படாததால், விவசாயிகளுக்கு எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலம்விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். அவர்கள், விளைவித்த பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்பனை செய்ய முடியும். ஆதார விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயி களுக்கு நன்மை அளிக்கும் சட்டங் களாகும். இதன் மூலம் விவசாயி களின் வருவாய் இரட்டிப்பாகும். இந்த சட்டங்களால் இடைத்தரகர் களுக்கு வேலை இல்லை. நாடு முழுவதும் வட்டார அளவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைப் பொருட் களை குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தி உரிய விலை வரும் போது விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு நன்மை அளிக் கும் வேளாண் சட்டங்களை சில அரசியல் கட்சியினர் போலியான தோற்றத்தை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடப்பார்க் கின்றனர். மத்திய அரசுக்கு எதிராகவிவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் என்ற பெயரில் பெரியகலவரம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்