தி.மலை அருகே டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த வில்வாரணி நட்சத் திர கோயில் பகுதியில் வசிப்பவர் ஜெயவேல்(63). இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு காரில் நேற்று சென்றுள்ளார். காரை, அதே பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
தி.மலை-அவலூர்பேட்டை புறவழிச்சாலை நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள செல்வ விநாயகர் நகர் பகுதியில் சென்றபோது, காரின் பின் டயர் வெடித்து சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த குணசே கரன் மனைவி ஜெகதீஸ்வரி(46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த பொது மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கலசப்பாக்கம் அடுத்த பாணாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுபடை யப்பன்(55) என்பவர் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாய மடைந்த வில்வாரணி நட்சத்திர கோயில் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல்(63), தணிகாசலம்(65), அவரது மனைவி ரமணி(50), சேகர் மனைவி செண்பகம்(50), ராஜேஷ் மனைவி ஜோதி(31), அவரது மகன்கள் தானேஷ்(9), பிரத்தேஷ்(11), சேலம் அம்மாபேட்டையில் வசிக்கும் குணசேகரன்(45), கார் ஓட்டுநர் வாசுதேவன்(34) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago