விரிஞ்சிபுரம் கோயிலில் சிம்ம குளம் திறப்பு கரோனா ஊரடங்கால் பக்தர்கள் நீராட தடை

By செய்திப்பிரிவு

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறையொட்டி நேற்று முன்தினம் இரவு சிம்மக் குளம் திறக்கப்பட்டது. கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் குளத்தில் நீராட பக்தர் களுக்கு தடை விதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்தில் பிரசித்திப்பெற்ற மரகதாம் பிகை சமேத மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இக்கோயிலில் கடை ஞாயிறு விழா கோகாலமாக கொண் டாடப்படுவது வழக்கம்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள சூளித்தீர்த்தம் மற்றும் சோம தீர்த்தத்தில் புனித நீராடி சுவாமியை வழிபட்டால் பக்தர்களுக்கு சகல பாக்கி யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தம், சிம்மத்தீர்த்தில் நள்ளிரவில் புனித நீராடி அன்றிரவு கோயில் வளாகத்தில் உறங்கினால், கனவில் இறைவன் ஒளியாக தோன்றி குழந்தை வரம் கொடுப் பார் என்பதும் ஐதீகம்.

இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே போல, ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்து டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனு மதிக்கப்பட்டனர்.

கடைஞாயிறையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றன. கோயில் சிம்ம குளத்துக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதில், கோயில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டு கோயில் குளத்தை திறந்து வைத்தனர். கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் குளத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக, கோயில் குளத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அங்கு காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டிய பெண்கள் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.

நேற்று காலை 6 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், பாலகனுக்கு உபநயன சிவ தீட்சை வழங்குதல் நடைபெற்றது. பின்னர், பிற்பகல் 12 மணியளவில் மார்கபந்தீஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்