பட்டியலின சிறுவர்களை மலம் அள்ள வைத்த விவகாரம் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி தர்ணா

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மலம் கழித்த பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேரை, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர், அவற்றை அள்ள வைத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைதான 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீர. செங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, தி.க நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதேபோல, கைது செய்யப்பட்டவர் கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுகுடல் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக பொது இடத்தை சீர் செய்தபோது அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் மலம் கழித்ததாகவும், இதுகுறித்து கேட்டதற்கு இளைஞர்களிடம் தகராறு செய்து ஆயுதங் களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்