வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த இதுவரை 65,452 பேர் விண்ணப்பம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 65,452 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,119 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 2,531 வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.

இதில், திருச்சி மாநகராட்சியில் உள்ள வெஸ்ட்ரி மெட்ரிக் பள்ளி, செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் ஆர்.சவான், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியர் சு.சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய டிச.10-ம் தேதி வரை மொத்தம் 65,452 பேர் விண்ணப்பித்துள்ளனர். திருச்சி மாவட்ட வாக்காளர் பட்டியலில் வயது வாரியாக ஒப்பீடு செய்ததில் 18-19 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் ஏறத்தாழ 85 ஆயிரம் பேர் இருக்க வேண்டும். தற்போது 48,374 புதிய வாக்காளர்களே உள்ள னர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களில் 18-19 வயது பூர்த்தியடைந்த 23 ஆயி ரம் புதிய வாக்காளர்கள் இடம் பெற்றுள் ளனர். தற்போது நடைபெறும் 2-வது கட்ட முகாமில் 18-19 வயதுள்ள ஏறத்தாழ 15 ஆயிரம் பேரிடமிருந்து பெயர் சேர்க்கும் படிவம் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி, தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க, திருத்த உள்ளிட்ட பணிகளுக்காக ஏராளமானோர் ஆர்வமுடன் வந்திருந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன் சிங் ஆர்.சவான், ஆட்சியர் ப. வெங்கட பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்