விழுப்புரம் மாவட்டம் திருவெண் ணெய்நல்லூரில் ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் 1,191.00 ச.மீ பரப்பளவில் புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதில், தரைதளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, வட்டாட்சியர் அறை,அலுவலக அறை,கணினி அறை கட்டப்படும். முதல் தளத்தில் அலுவலக அறை மற்றும் இரண்டாம் தளத்தில் கூட்டரங்கம்,பதிவறை,அலுவலக அறை, நில அளவை பிரிவு, சேமிப்புஅறை அமைகிறது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியினை நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் `நிவர்' புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதன்படி முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து கோனூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆர்த்தி, கெங்கவரம் ஊராட்சியைச் சேர்ந்த கன்னியம்மாள் ஆகியோருக்கு தலா ரூ.6 லட்சம், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வி.புதூர் ஊராட்சியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago