பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.50 லட்சம் வங்கி கடனு தவியை ஆட்சியர் ப.வெங்கட பிரியா நேற்று வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் பேசும் போது; “பெரம்பலூர் மாவட்டத் தில் கனரா வங்கியின் சார்பில் தொண்டுநிறுவனத்துடன் இணைந்து கூட்டுப்பொறுப்பு குழு அமைத்து குழுவுக்கு 4 முதல் 10 நபர் வரை தேர்வு செய்து கூட்டுப்பொறுப்பு குழு மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கறவை மாடுகள் வாங்கிக்கொள்ள ரூ.1 கோடி வரையில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 18 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 100 பேருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் கனரா வங்கியின் துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகாந்த், நபார்டு வங்கி துணைப் பொதுமேலாளர் நவீன்குமார், தொண்டு நிறுவன நிர்வாக தலைவர் செல்வராஜ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago