அமராவதி ஆற்றில் சாய, சலவை ஆலைக் கழிவுகள் கலப்பதில்லை என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மயிலம்பாடியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது;
கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து சாய, சலவை ஆலைகளும், கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் செயல்படுகிறது. மேலும், அமராவதி ஆற்றின் கரையில் சாய, சலவை ஆலைகள் செயல்படவில்லை. கொடைக்கானலில் தொடங்கி அமராவதி ஆறு காவிரியில் கலக்கும் வரை காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்க வாய்ப்பில்லை. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுப் படி, அமராவதி ஆற்றில் ஐந்து இடங்களில் ஆய்வு செய்து மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்யும்.
நீர்நிலைகளை மாசுபடுத்து வோரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, நீர்நிலைகளில் பெரிய அளவில் மாசு ஏற்படவில்லை. அவ்வாறு மாசு ஏற்படுத்தினால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago