2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என மாநில மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட மணப் பாறை, லால்குடி, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளில் வாக்குச் சாவடி வாரியாக மகளிர் குழு தொடக்க விழா மற்றும் பூத் கமிட்டி கையேடுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலா ளருமான ப.குமார் தலைமை வகித்தார். மணப்பாறை எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மண்டல பொறுப்பா ளரும், மாநில மின் துறை அமைச் சருமான பி.தங்கமணி, மகளிர் குழுக் களைத் தொடங்கிவைத்து, பூத் கமிட்டி கையேடுகளை வழங்கிப் பேசியது:
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்சி காணாமல்போய் விடும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால், 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டில் அதிமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வைக் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். ஜெயலலிதா உயிரு டன் இருந்தபோது பேச தைரியம் இல்லை. இதற்கெல்லாம் தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
அதைத்தொடர்ந்து, திருவெறும்பூரில் அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறியது: புயல் பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு விட்டது. கடலூரில் மட்டும் இன்னும் 10 சதவீத பணிகள் மீதமுள்ளன. அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக நீடிக்கிறது. 234 தொகு திகளிலும் போட்டியிட முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது தவறாக புரிந்து கொள் ளப்பட்டுள்ளது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்றார்.
தொடர்ந்து, முதல்வர் பழனி சாமி, 2-வது தொகுதியாக மணப் பாறையில் போட்டியிடவுள்ளதாக பரவிவரும் தகவல் குறித்த கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் கூற முடியாது என அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago