ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக் காளர் சேர்க்கை சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்களுக்காக ‘செல்பி வித் பி.எல்.ஓ’ என்ற போட்டி அறிவிக் கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்க்க இன்றும் (12-ம் தேதி) நாளையும் (13-ம் தேதி) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 580 வாக்குச்சாவடி மையங்களுடன் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 591 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மாவட்டம் முழுவதும் 1,122 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 580 மையங் களில் விண்ணப்பிக்கலாம்.
இளம் வாக்காளர்களுக்கு போட்டி
சிறப்பு முகாமில் இளம் வாக்காளர்களை கவர்ந்து வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ராணிப்பேட்டை நிர்வாகம் சார்பில் ‘செல்பி வித் பி.எல்.ஓ’ என்ற போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டியில் பங்குபெற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக புதிதாக பதிவு செய்யும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் ஒரு குழுவாக தங்களின் நண்பர்களுடன் சிறப்பு முகாம் நடைபெறும் மையங் களுக்குச் சென்று தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.பின்னர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் (பி.எல்.ஓ) உடன் நண்பர்கள் குழுவாக செல்போனில் அழகிய செல்பி புகைப்படத்தை எடுத்து 90808-20575 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘சிறப்பாக செல்பி புகைப் படம் எடுத்த ஒரு இளம் வாக்காளரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
அதேபோல், அதிக இளம் வாக் காளர் களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரு வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு சட்டப் பேரவை தொகுதி வாரியாக தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago