ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அளிக்கும் அனுமதியை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் 700 மருத்துவர்கள் பங்கேற்றனர்.
ஆயுர்வேத மருத்துவப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆங்கில முறை வழி மருத்துவர்கள் (அலோபதி) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பொது வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, தி.மலை மாவட்டத்தில் உள்ள 78 தனி யார் மருத்துவமனைகள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகள் மூடப்பட்டன. புறநோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. உள்நோயாளிகளுக்கும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக் கப்பட்டன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மாவட்டத்தில் உள்ள சுமார் 700 மருத்துவர்கள் பங்கேற்றனர். இதனால், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago