திருப்பத்தூர் அருகே ஓடும் அரசுப்பேருந்தில் நடத்துநர் திடீரென மயங்கி விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் அடுத்த மெய்யனூர் பணிமனையில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அரசுப்பேருந்து நேற்று காலை வந்தடைந்தது. பிறகு, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 32 பயணிகளுடன் மீண்டும் சேலம் நோக்கி பேருந்து புறப் பட்டது. பேருந்தில், சேலம் மாவட்டம் அரூர் அடுத்த பள்ளப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (50) என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (45) என்பவர் பேருந்தை இயக்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே அரசுப் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கருணாகரன் பணத்தை வசூல் செய்து கொண் டிருந்தபோது, திடீரென மயங்கி பேருந்துக்குள்ளேயே விழுந்தார். இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி யடைந்து அவரை எழுப்ப முயன்றனர்.
ஆனால், அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் பயணிகள் கூச்சலிட்டு, ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறினர். அதன்பிறகு, உடனடியாக ஓட்டுநர் குணசேகரன் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பேருந்து ஓட்டினார். அங்கு பயணிகள் நடத்துநரை தூக்கிச் சென்று அனுமதித்தனர்.
பரிசோதனையில் நடத்துநர் கருணாகரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் கருணாகரன் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, மாற்றுப்பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago