சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று தமிழகவாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்தி ருந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, தற்போது அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், அரசுமருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கப் பட்டது. தற்போது கட்டணமாக ரூ.5,44,370 வசூலிக்க கல்லூரிநிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டணம் என்பது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக் கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலானது.
நடப்பாண்டின் கட்டணமாக ரூ.5,44,370, சென்ற ஆண்டு நிலுவைத்தொகை ரூ.1,47,370 மற்றும் விடுதி கட்டணம் ரூ.80,000 என மொத்தம் ரூ.7,80,000-யை உடனடியாக செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தை கட்டணத்தை கட்ட முடியும். எனவேராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசுடை மையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago