சிதம்பரம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு அரசு உதவி பெறும் சிதம்பரம் ராமகிருஷ்ண வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் சங்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளை அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்கசெய்தல், அறிவியல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இவருக்கு பள்ளி செயலர் பாலசுப்ரமணியன் தலைமையில் நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், தமிழக அரசின் உயர்கல்வித் துறை வழங்கியிருக்கும் ‘சிறந்த அறிவியல் ஆசிரியர்’ விருதைக் குறிப்பிட்டு, சக ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் பாராட்டி பேசினர். தலைமையாசிரியர் சிவகுருவரவேற்று பேசினார். பள்ளி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, ஆசிரியர் சங்கரனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்