சின்னசேலம் ஏரியின் கிழக்கு கரையில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியது:
கொற்றவை சிற்பம் பல்லவர் கால, கிராமிய பாணியை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதன் உயரம் 83 செ.மீ, அகலம் 73 செ.மீ ஆகும். எட்டு கரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம்,கழுத்தில் சரபளி, சவடி போன்ற அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்ட வாள்,அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளன.
இடது மேற்கரங்களில் சங்கு, வில், கேடயம் போன்றவை காணப்படுகின்றன.இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது. கொற்ற வையின் வாகனமான மான் வலதுபுறம் பாய்ந்து ஓடும் நிலையில் உள்ளது. இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது.
இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago