பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை பெரு நிறுவனங்களிடம் வழங்கியதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கொமதேக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை பெரு நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்ததால், இங்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை தனியாருக்கு கொடுக்கும் போது, கச்சா எண்ணெய் விலையில் சிறிய விலை குறைவு ஏற்பட்டாலும், அதன் பலனை மக்கள் நேரடியாக அனுபவிப்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, தனியாருக்கு வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago