புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த கோபால் மகன் தினேஷ் (25). இவர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு அட்டை புதிதாக வழங்குவதற்காக தொண்டு நிறுவனம் மூலம் தன்னை நியமித்திருப்பதாகக் கூறி, டிச.2-ம் தேதி முதல் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த 600 பேரிடம் தலா ரூ.100 வீதம் வசூலித்துள்ளார்.
இதுதொடர்பாக, பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், வருவாய்த் துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டதில், தினேஷ் தவறான தகவல் அளித்து பணத்தை வசூலித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தினேஷை போலீஸார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்து லேப்டாப், பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago