வேலூரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக்நகர் இந்திரா காந்தி முதல் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (30). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
இவர், மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதால், அலெக்ஸ் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண்டும் என வேலூர் எஸ்பி செல்வகுமார் அளித்த பரிந்துரையை ஏற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், பொன்னை காவல் துறையினர் அலெக்ஸ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
சாராய வழக்கில் கைதானவர்
அதேபோல, அணைக்கட்டு அடுத்த சென்றாயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை சாராய வழக் கில் வேப்பங்குப்பம் காவல் துறை யினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், கார்த்திகேயன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண்டும் என எஸ்பி செல்வகுமாரின் பரிந் துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, கார்த்திகேயன் மீது வேப்பங்குப்பம் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago