அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலி யுறுத்தி வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நேற்று நடை பெற்றது.
வேலூர் ரங்காபுரம் பகுதியில் உள்ள மண்டல தலைமை போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் பாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்துக்கு தொழி லாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் பரசுராமன் வரவேற் றார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பேரவை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியு போக்கு வரத்து சம்மேளன பொருளாளர் சசிக்குமார், ஏஐடியுசி வேலூர் மண்டலத் தலைவர் அசோகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், 14-வது ஊதிய ஒப்பந் தத்துக்கான பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்கள் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணிக்கு சேர்ந்த அனை வரையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இக்கூட்டத்தில், டிடிஎஸ்எப் மாநில பேரவைத் தலைவர் அர்ஜூனன், மாநில பொதுச்செயலாளர் பத்ம நாபன், எச்எம்எஸ் மண்டல பொதுச்செயலாளர் அப்ரோஸ், எம்எல்எப் மண்டலப் பொருளாளர் இளவரசன் மற்றும் எல்பிஎப், சிஐடியு, ஏஏஎல்எல்எப், டிடிஎஸ்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago