அமராவதி ஆற்றில் 17,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து 7,450 கன அடி, திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்து 400 கனஅடி, பாலாறு பொருந் தலாறு அணையில் இருந்து 4,995 கன அடி, வரதமாநதியில் இருந்து 3,995 கன அடி என மொத்தம் 16,840 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீருடன் மழைநீரும் சேர்ந்து 17,500 கன அடி நீர் நேற்று முன்தினம் முதல் அமராவதி ஆற்றில் வெளியேற் றப்படுகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற் றின் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லவேண்டும். ஆற்றில் குளிப்பதையோ, துணி துவைப்பதையோ, செல்பி எடுப் பதையோ தவிர்க்கவேண்டும். ஆற்றுப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை அருகில் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago