அரிமளம் வனப்பகுதியில் உள்ள மழை நீர் தேக்கிகளை அகற்ற நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் வனப்பகுதியில் உள்ள மழைநீர் தேக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அரிமளம் வட்டாரத்தில் வனத்தோட்டக் கழகத்தின் சார்பில் பராமரிக்கப்படும் யூக்கலிப்டஸ் மரக் காடுகளில் மழைநீரை தேக்கி வைப்பதற்காக மரங்களின் வரிசைகளுக்கு இடையே சுமார் 3 அடியில் வாய்க்காலும், வனத் தைச் சுற்றி உயரமான வரப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், இப்பகுதியில் கனமழை பெய்தும் கூட மழை நீர் செல்லாததால் அரிமளம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குளம், கண்மாய்கள் முழுமையாக நிரம்பவில்லை.

இதனால் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனப்பகுதியில் உள்ள மழைநீர் தேக்கிகளை அகற்ற வேண்டும் என அரிமளம் பசுமை மீட்பு குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 6-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலு வலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

கூட்டத்தில், வனத்துறை, வனத் தோட்டக் கழக அலுவலர்கள் மற்றும் அரிமளம் பசுமை மீட்பு குழுவினர் கலந்துகொண்டனர். இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மழைநீர் தேக்கிகளை அகற்று வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து, அரிமளத் தில் பசுமை மீட்புக் குழுவின் தலைவர் கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. அதில் ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்