தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நாட்டில் உள்ள 67 வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் கடந்த 2016-ம் ஆண்டு 7-வது இடத்தையும், 2017-ம் ஆண்டு 27-வது இடத்தையும், 2018-ல் 33-வது இடத்தையும் பிடித்திருந்தது.
தரவரிசையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டால், பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்கும் நிதியாதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், பல்கலைக்கழகம் மீதான பொது மதிப்பீடும், கருத்தும் பாதிக்கப்படும் என்பது உணரப்பட்டது. இதையடுத்து, தரமான கல்வி வழங்குதல், மாணவர்களின் பன்முகத் தன்மையை மேம்படுத்துதல், பிற நிதியாதாரங்களைப் பெருக்குதல், தரமான ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுதல் போன்ற முன்னெடுப்புகளால் 33-வது இடத்தில் இருந்து தற்போது 8-வது இடத்துக்கு இப்பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது.
இதேபோல, மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4-வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago