போராட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அனுமதிக்கக் கோரி எலி களை வாயில் கவ்விக் கொண்டு விவசாயிகள் நேற்று திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லிக்குச் சென்று போராட முடிவெடுத்து கடந்த நவ.24-ம் தேதி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் புறப்பட்ட விவசாயி களை போலீஸார் தடுத்து நிறுத் தினர். இதனால், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பாதி தலையை மொட்டையடித்துக் கொண்டதுடன், மீசை- தாடியை பாதி அளவு வழித்துக் கொண் டனர்.
அதன்பின், டெல்லியில் விவ சாயிகள் நடத்தி வரும் போராட் டத்தில் பங்கேற்பதற்காக டிச.3-ம் தேதி மீண்டும் டெல்லி புறப்படச் சென்றபோது, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிரதான நுழைவு வாயிலில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், டெல்லிக்குச் செல்வதை போலீஸார் தொடர்ந்து தடுப்பதைக் கண்டித்தும், டெல்லி செல்ல தங்களை அனு மதிக்க வலியுறுத்தியும் கரூர் புறவழிச் சாலையில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் சிலர் இறந்த எலிகளை தங்கள் வாயில் கவ்வியிருந்தனர். தொடர்ந்து, விவசாயிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட் டத்தைக் கைவிடச் செய்தனர்.
தொடர்ந்து, போராட்டம் குறித்து பி.அய்யாக்கண்ணு கூறும்போது, “எங்கள் உரிமைகளை மீட்பதற் காக டெல்லி புறப்பட்ட எங்களை போலீஸார் ஏற்கெனவே 2 முறை தடுத்து நிறுத்தி கைது செய் தனர். எங்களைக் காவல் துறை வீட்டுக் காவலில் வைப்பது சரியா? இதுதொடர்பாக தான் ஒரு விவசாயி என்று கூறும் முதல்வர் பழனிசாமிதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை டெல்லிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago