குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு முகாம் நிறைவு

By செய்திப்பிரிவு

டெல்லியில் ஜன.26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள நாட்டுநலப்பணித் திட்ட தொண்டர்களின் தென்மண்டல அளவிலான தேர்வு முகாம் திருச்சி தேசிய கல்லூரியில் கடந்த நவ.27-ல் தொடங்கி நேற்று முன்தினம்(டிச.6) வரை நடைபெற்றது.

முகாம் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தர் ராமன் தலைமை வகித்தார். முகாம் குறித்த குறிப்புரையை தென்மண்டல என்எஸ்எஸ் அலுவலர் சாமுவேல் செல்லையா வழங்கினார். நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பின் தமிழக இயக்குநர் நட்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற் றுப் பேசியது: கரோனா வைரஸ் பரவிய காலத்தில் கோவிட் கதா என்ற விழிப்புணர்வு புத்தகத்தை கிராமங்கள்தோறும் வழங்கி மக்களிடம் என்எஸ்எஸ் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் என்எஸ்எஸ் சார்பில் பங்கேற்கும் 140 பேரில் இங்கிருந்து 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார். பின்னர் குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்கும் என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு முகாமை 3-வது முறையாக சிறப்பாக நடத்தியதற்காக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதழை துணைவேந்தர் கிருஷ்ணன் வழங்கினார்.

தமிழ்நாடு என்எஸ்எஸ் அலு வலர் செந்தில்குமார், காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கல்லூரி துணை முதல்வரும், என்எஸ்எஸ் அலுவலருமான டி.பிரசன்ன பாலாஜி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்