அரை வட்ட சுற்றுச்சாலைப் பணிகள் குறித்த தகவல் தர மறுக்கும் அலுவலர்களை கண்டித்து காத்திருப்புப் போராட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் கரூர் புறவழிச் சாலையில் உள்ள திண்டுக்கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி வரை 42.91 கிமீ தொலைவுக்கு அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது.

இந்தநிலையில், இந்த திட்டத்தில் மேற்கொள்ளப் படும் பணிகள் குறித்து தகவல் தர மறுக்கும் அலு வலர்களைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, மக்கள் அதிகாரம் செழியன், மகஇக ஜீவா, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சம்சுதீன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

போராட்டம் குறித்து ம.ப.சின்ன துரை கூறும்போது, “திண்டுக்கரை முதல் துவாக்குடி வரையிலான அரை வட்ட சுற்றுச்சாலைப் பணி களில் ஏரி, குளங்கள் மண்ணைக் கொட்டி அழிக்கப்படுவது குறித்து கூறிய புகாரின்பேரில், கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் அக்.7-ம் தேதி நேரில் கள ஆய்வு செய்தனர். ஆனால், அதுகுறித்த ஆய்வு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. ஆய்வு அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியும் அதிகாரிகள் யாரும் தகவல் தரவில்லை. எனவே, அலுவலர்களைக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒரு வாரத்துக்குள் ஆய்வு அறிக்கையைத் தருவதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்