நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
இக்கொடி நாளின்போது திரட்டப்படும் நிதியானது போரில் ஊனமுற்ற படைவீரர்கள், போரில் உயிர் நீத்த படைவீரர்களின் கைம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு கொடிநாள் வசூல்ரூ.40 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் கொடி நாளை முன்னிட்டுஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு இம்மாவட்டத்துக்கு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.40 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த இலக்கை தாண்டி ரூ.55,94,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு கொடிநாள் வசூலாக ரூ.40 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல இயக்குநர் ந.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்தார். கடந்த 2019ம் ஆண்டு கொடிநாள் வசூல் இலக்கு ரூ.71 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், ரூ.63 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார். முன்னாள் படைவீரர் நல அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago