தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக அக் கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் நேற்று நிறைவுபெற்ற பாஜகவின் வேல்யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் ரவி, இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
செய்தியாளர்களிடம் முருகன் கூறும்போது, ‘‘பாஜக நடத்திய வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது’’ என்று தெரிவித்தார். ரஜினி குறித்த கேள்விகளுக்கு, `ரஜினி அரசியல் கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம்’ என்றார். பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன், செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாகர்கோவில்
திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திரளான பாஜகவினர் பங்கேற்க போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து குமரியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் சென்ற வாகனங்கள் மட்டும்அனுமதிக்கப்பட்டன. தொண்டர்கள் சென்றவாகனங்களை அனுமதிக்காமல் போலீஸார்திருப்பி அனுப்பினர். கன்னியாகுமரி மகாதானபுரம், நாகர்கோவில், தக்கலை என மாவட்டம்முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுவேல் யாத்திரைக்கு சென்ற வானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுபோல் தென்காசி மாவட்டத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாஜகவினர் தடுக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago