நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.335 கோடி கடனுதவி மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.335 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள் ளது, என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவதற் கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2,400 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் அதிக பெண்கள் விண்ணப்பித்து வருவதால் இந்த ஆண்டு 6,000 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத் தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தாங்கள் பெற்ற கடனில் 98 சதவீதம் திருப்பி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக் களுக்கு ரூ.335 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

முன்னதாக முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், 25 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு மற்றும் 14 லட்சத்திற்கான கடனுதவி காசோலை, 4 மகளிர் சுய உதவிக்குழுக்களின் சிறப்பான செயல்பாடு களுக்காக கேடயம் ஆகியவற்றை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

திருச்செங்கோடு கோட்டாட் சியர் ப.மணிராஜ், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணை இயக்குநர் நாகராஜன், குமாரபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்