திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சேறும், சகதியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

தொடர் மழை காரணமாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பேருந்து நிலையத்தில் மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை யொட்டிச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால், அந்தச் சாலை வழியாக நடந்தும், இரு சக்கர வாகனங் களிலும் செல்லும் மக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

இதுதவிர, பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியையொட்டி அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.

எனவே, சேறும் சகதியுமாக மாறிய சாலையைச் சீரமைப்பது டன், தற்காலிக பேருந்து நிறுத்தங் களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், அங்கு மழைநீர் தேங்காத வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்