புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைக்‘கலாம்' எனும் அமைப்பினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். இதுவரை 276 வாரங்களில் 17,000 மரக் கன்றுகளை நட்டுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல்கலாமின் நினைவாக புதுக்கோட்டையில் விதைக்‘கலாம்' என்ற அமைப்பு கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள இளைஞர் கள் 150 பேரும் உறுப்பினர்கள் மட்டுமே. நிர்வாகிகள் யாரும் கிடையாது.
இவர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 மரக்கன்றுகள் முதல் 1,500 மரக்கன்றுகள் வரை நட்டு வருகின்றனர். அதன்படி, 276-வது வாரமாக நேற்று திருவரங்குளம் அருகே தோப்புக்கொல்லை பகுதியில் 6 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இது குறித்து இந்த அமைப்பின் உறுப்பினர் பி.மலையப்பன் கூறியது:
தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்கு உத்தரவாதமுள்ள இடத்தை தேர்வு செய்து புங்கை, வேம்பு போன்ற நிழல் தரும் மரக் கன்றுகளையும், பலா, மா, நாவல், கொய்யா போன்ற பயன்தரும் பழமரக்கன்றுகளையும் நடவு செய்து பராமரித்து வருகிறோம். மரக்கன்றுகளின் எண்ணிக்கையில் அக்கறை காட்டாமல் ஒரு கன்று நட்டால்கூட அதை முறையாக பரா மரித்து மரமாக்க வேண்டும் என் பதே எங்களது பிரதான நோக்கம்.
மூங்கில் குச்சிகளால் ஆன கூண்டுகளையே பயன்படுத்துகி றோம். ஊரடங்கு சமயத்திலும்கூட மரக்கன்று நடுவதை நிறுத்த வில்லை. இதுவரை 17,000 மரக்கன்றுகளை நட்டுள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago