திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் மழை நீடித்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 123.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1357 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 264.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 136.81 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97.50 அடியாகவும் இருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 21.50 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம், சேர்வலாறு- தலா 5, மணிமுத்தாறு, அம்பா சமுத்திரம்- தலா 3, நம்பியாறு- 4, சேரன்மகாதேவி- 1.20, நாங்குநேரி- 1.50, களக்காடு- 1.2, மூலக்கரைப்பட்டி- 10, பாளையங்கோட்டை- 8, திருநெல்வேலி- 1.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 23.20 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 16 மி.மீ., தென்காசியில் 11.10 மி.மீ., கடனாநதி அணையில் 9 மி.மீ., அடவிநயினார் அணை, செங்கோட்டையில் தலா 7 மி.மீ., ராமநதி அணையில் 5 மி.மீ., குண்டாறு அணையில் 4 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மிமீ, சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது.கடனா நதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 80.40 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 73.25 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது.
பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 68.24 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் அதிகரிக்காமல் 90 அடியாக இருந்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா தொற்று பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago