டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போரா டும் விவசாயிகளுக்கு ஆதரவ ளிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த் துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலி தலைமை வகித் தார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் அயிலை சிவசூரியன், நிர்வாகிகள் பாண்டி யன், வினோத்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தின்போது பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மை களை விவசாயிகள் எரித்தனர். இதேபோல, திருவெறும்பூர், நெ.1. டோல்கேட், உப்பிலியபுரம், மணப்பாறை, வளநாடு கைகாட்டி ஆகிய இடங்களிலும் போராட் டம் நடைபெற்றது. இப்போராட் டங்களில் பங்கேற்ற விவசாயிகள் 153 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந் தசாமி, சிஐடியு அன்பு உள்ளிட்டோர், பிரதமர் மோடியின் படங்களையும், உருவபொம்மையையும் எரித் தனர். அப்போது, போலீஸார் தடுத் ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 20 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன் ஆகியோர் தலைமையிலும், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் மார்க் சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, செங்கிப்பட்டியில் 30 பேரும், அம்மாபேட்டையில் 35 பேரும், ஒரத்தநாட்டில் 30 பேரும், திருக்காட்டுப்பள்ளியில் 35 பேரும், வல்லத்தில் 11 பேரும், திருவையாறில் 34 பேரும், திருவோணத்தில் 34 பேரும் பிரதமரின் படம், உருவபொம் மையை எரித்து, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு, கைதாகினர். மேலும் பாபநாசம், திருவிடைமருதூர், மதுக்கூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சி.சோமையா, ஏ.ராமையன், நடராஜன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட் டத்தில் ஈடுபட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரது படத்தை விவசாயிகள் எரித்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உட்பட 111 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டம் திருமா னூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப் பினர் சவுரிராஜன், ஒன்றியச் செய லாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டத்தில்...

நாகை தலைமை தபால் நிலையம் முன் நேற்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் பகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற 15 பெண்கள் உட்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதேபோல, கீழையூர் அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நாகை மாலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்ற 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டம் தோகைமலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் இலக்குவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர், பிரதமரின் உருவபொம்மையை எரித்தனர். இதையடுத்து, 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்