பெரம்பலூர் அருகே திமுகவினர் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திமுக துணைப் பொதுச் செயலா ளர் ஆ.ராசா உருவபொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை நெடுஞ் சாலையில் திமுகவினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சென்னையில் அண்மையில் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் பழனிசாமியை அநாகரிகமாக விமர்சித்ததாகக் கூறி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய அதிமுகவினர் நேற்று முன்தினம் இரவு இரூர் அருகே ஆ.ராசா உருவபொம் மையை எரித்தனர்.

இந்நிலையில், ஆ.ராசா உருவபொம்மையை எரித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட திமுகவினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் பெரம் பலூர் மாவட்டம் இரூரிலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருச்சி -சென்னை நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி கார்த்தி கேயன் தலைமையி லான போலீ ஸார், மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர். இந்த மறியலால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்